அப்பம்

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய் - அரை மூடியை சின்னச்சின்ன பற்களாக கீறிக் கொள்ளவும்
ஏலப்பொடி - அரை டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

 • முதல் நாள் மாலையில் அரிசியை ஒருமணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை சுத்தமாகவிட்டு, ஒரு காசித் துண்டில் நிழல் உலர்த்தலாக உலர்த்தி வைக்கவும்.
 • இதை மிக்ஸியில் நன்றாகப் பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும். கப்பியை தூர எறிந்து விடவும்.
 • இரண்டு பால் கரண்டி தண்ணீரில் வெல்லத்தைப் பாகு காய்ச்சவும்.
 • முற்றிய பாகாக வந்ததும், ஏலப்பொடி, தேங்காய்த் துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கவும்.
 • மாவை பாகில் செலுத்தி மூடி வைக்கவும்.
 • மறுநாள் காலையில் அப்ப மாவு இறுகி இருந்தால், சிறிது பால் தெளித்து இட்லி மாவு பதத்திற்குத் தளர்த்திக் கொள்ளவும்.
 • அப்பக் குழியில் மாவை சிறு கரண்டியால் எடுத்து எண்ணெயில் விடவும்.
 • இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
 • ஒருவேளை வெல்லம் அதிகமாகி, அப்பம் பிரிந்து போனால் மேலும் சிறிது அரிசிமாவு
  சேர்த்துக் கொள்ளவும்.
 • வாணலியில் செய்வதானால் இரண்டு மூன்று அப்பங்களுக்கு மேல் ஒரே நேரத்தில் இட வேண்டாம். சிறிய வாணலியில் ஒவ்வொன்றாகச் செய்தாலும் சரியே.
 • எண்ணை அதிகமாக வைத்து மிதமான தீயில் பொரித்தெடுத்தால் நன்றாக வரும்.

நீர்மோர்

புளிக்காத தயிர் – ஒரு கப்
தண்ணீர் – 4 கப்
இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
கொத்தமல்லித்தழை - கொஞ்சம்
பச்சை மிளகாய் – 1/2
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – அரை சிட்டிகை

தயிரை தண்ணீர் விட்டு நன்றாக கடைந்து மோராக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் எல்லாவற்றையும் அரை தம்ப்ளர் தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து, வடிகட்டி மோரில் ஊற்றி நன்றாக கலக்கவும்.
பிரிட்ஜ்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.


.

பானகம்

பாகு வெல்லம் துருவியது – இரண்டு கப்
தண்ணீர் – 4 கப்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
சுக்கு பொடி– 1 சிட்டிகை
சின்ன எலுமிச்சம் பழம் – ஒன்று

வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டவும்.
இதில் ஏலம், சுக்கு பொடிகள் ஒவ்வொரு சிட்டிகை போட்டு கலக்கவும்.
ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து பிரிட்ஜ்ஜில் வைத்து ஜில் என்று பரிமாறவும்.


(சந்தோஷி மாதா பூஜை அன்று எலுமிச்சம் பழம் பிழிய வேண்டாம்.)

போளி

மைதா - 1 கப்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - கால் கப்

பூரணம் செய்யும் முறை இங்கே காணவும்.
 • மைதாவை, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கால் கப் நல்லெண்ணெய் விட்டு கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
 • ஒரு வாழை இலையில் ஒரு உருண்டையை வைத்து இலேசாகத் தட்டி, அதில் கொஞ்சம் பூரணம் வைத்து மூடி, கையாலேயே பெரியதாக தட்ட வேண்டும்.
 • கனமான இரும்பு தோசைக் கல்லில், மிதமான தீயில், வாழை இலையை அப்படியே திருப்பி போட்டு, மெதுவாக வாழை இலையை மட்டும் உரித்து எடுக்க வேண்டும்.
 • ஓரங்களில் நெய் ஊற்றி திருப்பி போட்டு, பொன்னிறம் வந்ததும் எடுத்து பரிமாறவும்.
போளிகளை ஒன்னு மேல ஒன்னாக அடுக்கக் கூடாது. பிய்ந்து போய் விடும்.

முப்பருப்பு லட்டு

கடலைப் பருப்பு - ஒரு பால் கரண்டி
துவரம் பருப்பு - ஒரு பால் கரண்டி
பாசிப்பருப்பு - ஒரு பால் கரண்டி
தேங்காய்த் துருவல் - இரண்டு டீஸ்பூன்
சர்க்கரை - இரண்டு பால் கரண்டி
ஏலக்காய் - 2

செய்முறை

பருப்புகளையும் தனித்தனியாக அரை மணிநேரம் ஊற வைக்கவும். நன்றாக தண்ணீரை வடித்து விட்டு தனித்தனியே மிக்சியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.

உடைத்தப் பருப்புகளை தனித்தனியாக எண்ணெய் விடாமல் பருப்பு வாசனை வரும் வரை, ஈரம் போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.


சர்க்கரை பாகு காய்ச்சி ஒரு கம்பி பதம் வரும்போது, அதிலேயே பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காயை ஒன்றன்பின் ஒன்றறாகச் சேர்த்து குறுக்கவும்.

வெதுப்பாக ஆறியதும் லட்டுகளாக உருட்டவும்.

பச்சரிசி இட்லி

நிவேதனத்திற்காக மட்டுமே செய்யப்படுகிறது. புழுங்கலரிசி ஏற்கனவே அடுப்பில் வைத்து வெந்து இருப்பதால் சேஷம் எனக்கருதப்படுகிறது. நிவேதனத்துக்கு ஆகாது.

பச்சரிசி மட்டும் பயன்படுத்திச் செய்யப்படுவதால் ரொம்ப கல்லாக வரும்.

சாப்பிடமுடியாமல் வீணாக்குவதால், நான் நான்கு இட்லி மட்டுமே நைவேத்தியத்திற்கு மட்டும் செய்வேன்.

பச்சரிசி ஒரு பங்குக்கு, கால் பங்கு உளுந்து, மற்றும் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து, உப்பு போட்டு இட்லி மாவு போல அரைத்துக் கொள்ளவும்.

இதை இட்லிகளாக வார்த்து நிவேதனம் செய்யலாம்.

கொழுக்கட்டை சொப்பு

 • பச்சரிசியை இரண்டரை மணி நேரம் ஊறவைக்கவும்.
 • அரிசியை நன்கு நைசாக தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
 • இதை அடி கனமான வாணலியில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிதமான தீயில் கைவிடாமலும் அடிப்பிடிக்காமலும் கிளறவும்.
 • மாவு இறுகிவரும் transparent ஆகி வரும் வரை கை விடாமல் கிளறி நன்றாக வெந்த பின் (கொஞ்சம் மாவை கையில் எடுத்தல் கையில் ஒட்டாமல் உருட்ட வரும்), ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும்.

உளுத்தங்கொழுக்கட்டை

உளுத்தம் கொழுக்கட்டைக்கு பூரணம் செய்ய:
உளுத்தம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 2
இஞ்சி
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு
 • உளுத்தம் பருப்பு ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
 • காய்ந்தமிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து அதிகம் நீர் விடாமல் கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 • எண்ணெய் தடவிய இட்லித் தட்டுகளில் இட்லிக் குக்கரில் அரைத்த விழுதை ஊற்றி 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
 • இவை நன்றாக ஆறியதும் லேசாக உதிர்த்து மிக்ஸியில் லேசாக பொடித்துக் கொள்ளவும். ஆறாமல் மிக்சியில் சுற்றினால் குழைந்து விடும். மிக்சியும் கெட்டு போகும். கை சுடும்.
 • சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கி உதிர்த்த பூரணத்தில் சேர்க்கவும். வேண்டுமானால் பச்சை மிளகாயை மாவு அரைக்கும்போதே சேர்த்து அரைத்துக்கலாம்.

கொழுக்கட்டை மேல்மாவு செய்முறை இங்கு பார்க்கவும்.

எள்ளுக் கொழுக்கட்டை

வெள்ளை எள் - 1 கப்
வெல்லம் துருவியது - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

எள்ளை எண்ணைவிடாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடிக்கவும்.
பின்னர் வெல்லம் போட்டு, ஒரு தரம் மட்டும் சுற்றவும்.
எள்ளும், வெல்லமும் கலந்தப்பின் வெளியே எடுத்து ஒரு தட்டில் கொட்டி, ஏலக்காய் சேர்த்து கையால் நன்றாகக் கிளறி விடவும்.

கொழுக்கட்டை மேல்மாவு செய்முறை இங்கு பார்க்கவும்.

கடலைப் பருப்பு கொழுக்கட்டை

கடலைப் பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து தண்ணீரை ஒட்ட வடித்து, மிக்சியில் மெல்லிய ரவை போல கர கரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

கொழுக்கட்டை மேல்மாவு, பூரணம் செய்முறைகள் இங்கு பார்க்கவும்.

கவனிக்க: இந்தப் பூரணத்தில் தேங்காய் சேர்க்க வேண்டாம்.

மற்றபடி வெல்ல கொழுக்கட்டை செய்வது போலவேதான்.

தேங்காய் பூரண கொழுக்கட்டை

கொழுக்கட்டை மேல் மாவுக்கு:

பச்சரிசி - ஒரு கப் ( ஆர் 20 இரகம் கிடைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்)
உப்பு - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - அரை கப்

கொழுக்கட்டை பூரணத்திற்கு:

தேங்காய் - ஒன்று
பாகு வெல்லம் துருவியது - முக்கால் கப்
ஊற வைத்த கடலைப்பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன் - அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

மேல் மாவு செய்முறை:
 • பச்சரிசியை ஒருமணிநேரம் ஊறவைத்து மிக்சியில் தோசை மாவை விட்ட ஒரு பதம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
 • இதை அடிகனமான வாணலியில் (இன்டாலியம் வாணலி இருந்தால் நலம்) சிறிது எண்ணெய் (ஒரு டீஸ்பூன்) விட்டு கை விடாமல், அரிசிமாவையும், ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து transparent-டாக ஆகும் வரைக் கிளறவும்.
 • கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் இந்த முறையில், மேல் மாவு தடியாக இல்லாமல் மெல்லிசாக இரப்பர் போல இழுத்த இழுப்புக்கு வரும். வேண்டும் என்றால் அரிசிமாவை பாதிப்பாதியாகப் பிரித்து இரண்டு தரம் கிளறலாம்.
 • கிளறிய மாவு சிறிது வெதுவெதுவென ஆறினதும், இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கையால் சப்பாத்தி மாவு போல அழுத்திப் பிசையவும்.
 • கவனிக்க: ஒன்றிரண்டு தரம் பிசைந்து விட்டு நிறுத்தவும். ரொம்ப நேரம் பிசைந்து கொண்டே இருந்தால் மாவு நசநச என்றாகி விடும்.
 • மாவை சுத்தமான துணியில் சுற்றி வைக்கவும். நனைத்துப் பிழிந்த ஈரத்துடன் இருக்கும் காட்டன் வெள்ளைத் துணியாக இருந்தால் மாவு காய்ந்து போகாது.
பூரணம் செய்ய:
 • ஒரு தேங்காயை ஓடில்லாமல் துருவிக்கொள்ளவும்.
 • ஒரு கரண்டி தண்ணீரில் வெல்லத்தை நன்றாக கரைத்துக் கொண்டு, வடிகட்டி பின் ஒரு அடிகனமான வாணலியில் ஒரு கம்பி படத்திற்கு வரும் வரை பாகு காய்ச்சவும்.
 • அடுப்பை மிதமாக எரியவிட்டு (சிம்மில் வைத்து), இதில் துருவிய தேங்காய், கடலைப்பருப்பு அரைத்த விழுது மற்றும் ஏலக்காய் பொடியைப் போட்டு பூரணம் உருண்டு வரும் வரை கிளறிக் கொள்ளவும்.
கொழுகட்டை அச்சில் செய்ய:
 • பிளாஸ்டிக் மற்றும் இன்டாலியம் வகைகளில் கொழுக்கட்டை-அச்சு கடைகளில் கிடைக்கிறது. எனக்கு இன்டாலியம் அச்சு பிடிக்கும். இதை நன்றாக அலம்பி, நல்லெண்ணெய்தடவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து, தட்டை போல தட்டி, அச்சில் ஓட்டினார்போல வைக்கவும்.
 • இதில் சிறிது பூரணம் (சின்ன நெல்லிக்காய் அளவு) வைத்து மூடவும். அச்சின் ஓரத்தில்அதிகப்படியாக இருக்கும் மாவை வழித்து எடுத்து விடவும்.
 • இதை இட்லி குக்கரில் வேக விடவும்.
கொழுக்கட்டை வழக்கமான முறையில் செய்ய:
 • உள்ளங்கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு மாவை மெல்லிசான தட்டை போலசெய்து, நடுவில் சிறிது பூரணம் வைத்து மூடவும்.
 • இதை இட்லி குக்கரில் வேக விடவும்.


.

Minerals - used in cooking

 • ASPHALT ----Shilaji ----Chilajitam ----சிலஜிதம்
 • CATTLE FISH BONE ----Samutrafan ----Kadal Pasi ----கடல் பாசி
 • COPPER ----Thamba ----Sembu ----செம்பு
 • LEAD ----Sheesha ----Kareeyam ----காரீயம்
 • LUMP ALUM ----Fitakari ----Padikaram ----படிகாரம், சீனாக்காரம், படிக்காரம்
 • MERCURY ----Para ----Padharasam ----பாதரசம்
 • MICA ----Abrak ----Abrakam ----அபரகம்
 • MINERAL RED LEAD ----Cinthur ----Chendhuram ----செந்தூரம்
 • SALT ----Namak ----Uppu ----உப்பு
 • SILICATE OF ALUMINA ----Gopi Chandan ----Gopi Chandan ----கோபீ சந்தனம்
 • SILICATE OF MAGNESIA ----Shankajira Sangajarahath ------- ----
 • SULPHATE OF MERCURY ----Singroff Hingalok ----Hingalingam ----ஹிந்கலிங்கம்
 • SULPHUR ----Gandhak ----Gandhakam ----கந்தகம்
 • TIN INGOTS ----Kalai ----Velliyeam ----வெள்ளி ஈயம்
 • ZINC ----Jastha ----Thuthunagam ----துத்தநாகம்

பதிர் பேணி

மைதா -2 கப்
நெய் - 6 டீஸ்பூன்
ஏலக்காய் - 6
அரிசி மாவு - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1 லிட்டர்
பொரிக்க எண்ணெய்

பதிர் செய்ய:
 • அரிசி மாவையும், நெய்யையும் பேஸ்ட் போல குழைத்து வைக்கவும்.
பேணி செய்ய:
 • சிறிது தண்ணீர் தெளித்து தெளித்து மைதா மாவை மெத்தென்று ஆனால் கெட்டியாகபிசைந்து கொள்ளவும்.
 • இதை பன்னிரண்டு பந்துகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும்சப்பாத்தி இடுவது போல வட்டமாக இட்டு வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு சப்பாத்தி மேல் அரிசிமாவு-நெய் பேஸ்டை தடவி இன்னொரு சப்பாத்தியை அதன் மேல்வைத்து, மீண்டும் கொஞ்சம் அழுத்தாமல், இரண்டும் இலேசாக ஒட்டிக்கொள்ளுமாறு பூரிக்கட்டையால் தேய்க்கவும். அரிசிமாவு-நெய் பேஸ்டை இதன் மேல் தடவவும்.
 • இப்போது மீண்டும் ஒரு சப்பாத்தியை அதன் மேல் வைத்து பூரிக் கட்டையால் தேய்க்கவும்.
 • இந்த கனமான சப்பாத்தியை ஓரத்திலிருந்து மெதுவாக உருட்டி ரோல் செய்யவும்.
 • இந்த ரோலை மீண்டும் சின்னச் சின்னதாக சம அளவில் வெட்டி, சப்பாத்திகளாக இடவும்.
 • எண்ணையில் பொறித்து, எண்ணெய் நன்றாக வடியுமாறு ஒரு தட்டிலோ, பாத்திரத்திலோஎடுத்து வைக்கவும்.
ஜீரா செய்ய:
 • ஒரு லிட்டர் பால் அரை லிட்டராக குறுகும் வரைக் காய்ச்சவும். அடுப்பை அனைத்து விடவும்.
 • சர்க்கரை பொடி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கரையும் வரை கலக்கவும். இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பரிமாறும் முறை:

சாப்பிடப் போகும் நேரத்தில், சாப்பிடும் தட்டில் ஒரு பதிர் பேணியை வைத்து, இந்த பால் ஜீராவை ஒன்றிரண்டு கரண்டிகள் அதன் மேல் விட்டு, பரிமாறவும்.

அதிரசம்

பச்சரிசி – 2 கப்
சர்க்கரை – 1 கப் (அல்லது வெல்லம் என்றால் 2 கப்)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
ஏலப்பொடி
பொரிக்க எண்ணெய்

 • முதல் நாள் இரவே பச்சரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து விட்டு, நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.
 • மறுநாள் காலை, இதை மிக்ஸியில் பொடித்து, மாவாக சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
 • அரிசிமாவு, தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்.
 • ஒருமணி நேரம் கழித்துப் பார்த்தால் அரிசிமாவு, தேங்காய்த் துருவலில் இருக்கும் ஈரத்தால்சக்கரை கரைந்து, கலந்து, மாவுடன் இணைந்து பாகில் செலுத்திய அதிரச மாவு மாதிரி ஆகியிருக்கும்.
 • எண்ணெய் காய்ந்ததும், குறைந்த தீயில், எண்ணெய் தொட்டுக் கொண்டு, மாவை சின்ன உருண்டைகளாக உருட்டி, அதிரசமாகத் தட்டிப் போட்டு, இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
===========
 • வெல்ல அதிரசம் என்றால், கால் கப் தண்ணீரில் வெல்லத்தைப் பாகு காய்ச்சவும்.
 • தண்ணீரில் சிறிது ஊற்றி பின் கையில் எடுத்து உருட்டினால் உருட்ட வராமல் தொய்ந்து கொள்ளும்.
 • பின் அரிசி மாவை பாகில் செலுத்தி, ஏலப்பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
 • நெய் அல்லது எண்ணெய் வைத்து, சூடானதும், தேவையான அளவிற்கு மாவை உருட்டி, தட்டிப் போட்டு, வெந்ததும் எடுத்து வைக்கவும்.
 • உருண்டை வெல்லமாக இருத்தல் நலம். அச்சு வெல்லம் உதிர்ந்து விடும்.

தவல வடை

ஆமவடை போலவேதான். ஆனால் அதே பொருட்களோடு பச்சரிசி மற்றும் புழுங்கரிசி இரண்டையுமே சேர்க்க வேண்டும்.
அதாவது பருப்பெல்லாம் ஒன்று என்றால் அரிசி கால் (1:1/4 ratio) என்றரைத்து, மிளகாய், உப்பு எல்லாம் இந்தளவுக்கு ஏற்றார்ப் போல சேர்த்துப் பண்ண வேண்டும்.

ஆமவடை

 • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
 • தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, மிக்சியில் நான்கைந்து காய்ந்த மிளகாய், தேவையான உப்பு, ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • அரைத்து பாத்திரத்தில் எடுத்து வைத்த பிறகு, கொஞ்சம் ரவையையும் (ஒரு ஸ்பூன் அளவு) மாவுடன் பிசிறி வடை தட்டினால் நல்ல மொறு மொறுப்புடன் இருக்கும்.

உளுந்து வடை

தேவையானவை:

உளுந்து - 1 கப்
ப.மிளகாய் - 5
பச்சரிசி - 2 ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5-6 ஆர்க்குகள்
உப்பு - தேவையான அளவு

 • உளுந்தை இரண்டு ஸ்பூன் பச்சரிசி சேர்த்து இரண்டு மணி நேரமாவது ஊறவைக்கவும்.
 • இதை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் பச்சைமிளகாய், உப்பை சேர்த்து போட்டுஅரைக்கவும்.
 • அரைத்த உளுந்தில், கறிவேப்பிலை மற்றும் சீரகத்தை சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
 • உள்ளந்கையிலோ அல்லது இலையிலோ வைத்து தட்டி, தண்ணீர் தொட்டு துளையிட்டு, சூடான எண்ணையில் பொன்னிறமாக ஆகும் வரை திருப்பி திருப்பி போட்டு பொறித்துஎடுக்கவும்.

..

வெல்லப் பாயசம்

அரிசி - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
பால் - 1 கப்
முந்திரிப்பருப்பு - ஒரு
டீஸ்பூன்
திராட்சை - ஒரு
டீஸ்பூன்
ஏலப்பொடி - அரை
டீஸ்பூன்


அரிசியை அரை மணி நேரம் ஊற விடவும்.
தண்ணீரை வடித்துவிட்டு, தேங்காய் துருவலோடு சேர்த்து, வேண்டிய தண்ணீர் விட்டு, நைஸாக அரைக்கவும்.
வெல்லத்தை துருவி, ஒன்றரை கப் தண்ணீரில், கரைய விட்டு, வடிகட்டி பின் கொதிக்கவிடவும்.
அரைத்த விழுதை இதில் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும்.
நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
இறக்கிய பின்பே தேவையான பாலை விடவும்.
ஏலப்பொடி, நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.

.

தக்காளி, தேங்காய் தயிர் பச்சடி

கெட்டி தயிர் - இரண்டு கப்
தக்காளி - ஒன்று பொடியாக நறுக்கியது
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லித்தழை - கொஞ்சம்
பொடி உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

தக்காளி மற்றும் தேங்காய் துருவல்களை தயிரில் கலந்து, உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
இதில் பச்சை மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டி, கருவேப்பிலை, கொத்துமல்லித் தழையை சேர்த்து கலந்து வைக்கவும்.

பயத்தம் பருப்பு தேங்காய் கோசுமறி

பயத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லித்தழை - கொஞ்சம்
பொடி உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

பயத்தம் பருப்பை ஊற வைத்து, தேங்காய் துருவலில் கலந்து, உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
இதில் பச்சை மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டி, கருவேப்பிலை, கொத்துமல்லித் தழையை சேர்த்து கலந்து பிசறவும்.

.

த‌க்கா‌ளி ‌ஸ்‌வீ‌ட் பச்சடி

தேவையானப் பொருட்கள் :

தக்காளி - 2-3
சர்க்கரை - 1 கப்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு கம்பி பதத்தில் சர்க்கரையை பாகு செய்து கொள்ளுங்கள்.

தக்காளியை வேக வைத்து அரைத்து கொள்ளுங்கள்.

இதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொண்டு அடுப்பில் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை பாகை சேர்த்து, ஒரு கொதி வரும் போது இறக்குங்கள்..

காரட் கோசுமறி

ஒரு காரட்டைத் துருவி, தேவையான பொடி உப்பு சேர்த்து பிசறி வைத்துக் கொள்ளவும்.

துருவிய காரட்டில் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து போடவும்.

அவ்வளவுதான்.

தக்காளி ரசம்

புளி – ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி – 3 பெரிது
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
ரசப் பொடி – ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லித்தழை – சிறிது
கல் உப்பு – தேவையான அளவு
தாளிக்க - நெய், கடுகு, சீரகம்

செய்முறை:
 • தக்காளி, துவரம் பருப்பு இவற்றை குக்கரிலேயே வேக விட்டு வைத்துக் கொள்ளவும்.
 • பருப்பை தனியாக அரை தம்ப்ளர் நீரில் கரைக்கவும்.
 • தக்காளியில் தோல் மற்றும் விதை நீங்குமாறு அரை தம்ப்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டிவைக்கவும்.
 • புளித்தண்ணீர் மூன்று தம்ப்ளர் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
 • இதில் இரசப்பொடி, கல் உப்பு சேர்த்து இரண்டு தம்ப்ளராகச் சுண்டும் வரை கொதிக்க விடவும்.
 • சுண்டிய புளி நீரில், மஞ்சள் பொடி போட்டு, முதலில் தக்காளி கரைசல் விட்டு, ஒரு கொதிவந்தவுடன் பருப்புக் கரைசலை விடவும்.
 • பொங்கி வரும் போது தாளித்துக் கொட்டி, கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து ஒரேயொருகொதி மட்டும் விடவும்.
 • இறக்கியதும், ஈயப்பாத்திரத்துக்கு மாற்றி கட்டி பெருங்காயம் என்றால் பொரித்தும், பொடிபெருங்காயம் என்றால் அப்படியே தூவி மூடி வைக்கவும்.


.

முட்டைகோஸ் கறி - 1

முட்டைகோஸ், பச்சைப் பட்டாணி, தேங்காய் போட்ட கறி

முட்டைகோஸ் - கால் கிலோ பொடிப்பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2-3
பச்சை பட்டாணி - ஒரு கப்
தேங்காய் - அரை மூடி துருவியது
சர்க்கரை - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்கு
கொத்தமல்லித்தழை - அரைக் கைப்பிடி
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

வாணலியில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு சிறிது வதக்கவும்.
பச்சைப்பட்டாணி, முட்டைகோசை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும். நல்ல பொடியாக நறுக்கி இருந்தால் சீக்கிரமே வெந்து விடும்.
உப்பு சேர்த்து, சிறிது சர்க்கரை தூவி திருப்பி விட்டு, அடுப்பை அனைத்து விட்டு, கருவேப்பிலை கொத்துமல்லித் தழை சேர்த்து, மூடி வைக்கவும்.

பிட்லை


சாதம்

 • அரிசியை நன்றாக களையவும். சில அரிசிகளில் வெண்மை நிறம் வர டால்கம் பவுடர்உபயோகிப்பதாக கேள்விபட்டிருக்கிறேன்.
 • கல், நெல்மணிகள், உமி இருந்தால் நீக்க வேண்டும்.
 • தண்ணீர் தெளிவாக வரும் வரை களைய வேண்டும்.
 • அரிசியை வேகவைக்கும் போதே உப்பு அல்லது வேறு எந்தப் பொருளையும் தாளித்து சேர்க்கவேண்டாம். இதனால் சாதத்தின் உண்மையான சுவை கெடுகிறது.
 • குக்கரோடு அடியில் போட ஒரு தட்டு கொடுப்பார்கள். அந்தத் தட்டு மூழ்கும் அளவுக்குமட்டும் தண்ணீர் விடவும். இல்லையென்றால், தண்ணீர் கொதிக்கும் போது சாதத்தில்விழும், சாதம் குழைந்து விடும். அந்தத் தட்டு போடாவிட்டால், சாத்துப்பாத்திரத்தில் இருந்துதண்ணீர் கீழே சிந்தி விடும். (கொதிக்கும் போது பாத்திரம் குக்கருக்குள் ஆடும்).
 • சாத்துப் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
 • பச்சரிசி - 1:2.5 ratio ஒரு கப் அளவுக்கு இரண்டரை கப் அளவில் தண்ணீர் என்று பிரஷர்குக்கரில் சமைக்கலாம்.
 • புழுங்கரிசியாக இருந்தால், 1:3 ratio.
 • குக்கரில் மூன்று முதல் நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும். கால் மணிநேரம் கழித்துதிறக்கவும்.

Dairy Products

Butter---Makkhan---Vennai---வெண்ணை
Butter Milk ---Mattha (Chhaach), Chaas, Matta---Mor---மோர்
Clarified Butter---Ghee---Nei---நெய்
Condensed Milk, Dried Whole Milk, Milk Thickened---Khoya, Mawa---Paal Kova---பால் கோவா
Cottage Cheese ---Paneer ---Paalaadai Katti---பாலாடை கட்டி
Cream ---Malai ---Paalaadai---பாலாடை
Curd, Yoghurt---Dahi ---Thayir---தயிர்
Milk---Doodh---Paal---பால்
Whey---Dahi Ka Pani---Thayir thelivu---தயிர் தெளிவு
Yeast---Khameer---khadi---காடி

vegetables, காய்கறிகள்

 • English----Transliterated Hindi----Transliterated Tamil----தமிழ்
 • Agathi Flowers --------Agathi Poo----அகத்தி பூ
 • Apple----Sabe, Sev----Araththippazham ----அரத்திப்பழம்
 • Ash gourd----Petha, Kadoo----Poosanikkai----பூசணிக்காய்
 • Avocado, Butterfruit----Makhanphal----Vennai Pazham----வெண்ணை பழம்
 • Bael, Stone Apple, Bengal Quince, Bael fruit, Golden apple, Beli, Bel tree----Bel, Siriphal, Sirphal, Bello, Bilva----Vilva-Pazham, Bilvam, Vilvam, Vilvam, Kuvilam Palam----வில்வ பழம், பில்வம், வில்வம், குவிலம் பழம்
 • Banana----Kela----Vazhaippazham----வாழைப்பழம்
 • Beetroot----Chacundar----Senkizhangu, Akkarakizhangu----செங்கிழங்கு, அக்கரகிழங்கு
 • Bell Pepper, Capsicum----Simla Mirch----Kudamilagai----குடமிளகாய்
 • Ber----Ber----Berikkai----பேரிக்காய்
 • Bitter gourd, Charratis----Karela----Pakal Kai, Pavakkai, Pagarkkai----பாகல் காய், பாவக்காய், பாகற்க்காய்
 • Bottle gourd----Lauki, Doodhi----Suraikkai----சுரைக்காய்
 • Brinjal----Baingan----Kaththarikkai----கத்தரிக்காய்
 • Broad Beans----Kali Seim Ki Phalli, Sem----Pattai avarai----பட்டை அவரை
 • Broad Beans --------Avarakai----அவரைக்காய்
 • Cabbage----Bandh Gobi, Patta Gobi----muttai kos----முட்டை கோஸ்
 • Calabash cucumber----Ghia Turai----Sorakkai----சொரக்காய்
 • Canna Edulus, Queensland arrowroot----Sabja----Vailay-sembu----வைலை சேம்பு
 • Capsicum --------Kodamilagai----கொடமிளகாய்
 • Capsicum (Green Pepper)----Kashmiri Mirch, Simla Mirch, Bari Mirch----Capsicum----காப்சிகம்
 • Carrot----Gajar----Carrot----காரட்
 • Cauliflower----Phool Gobi----Pookosu----பூகோசு
 • Cauliflower --------Cauliflower----காலி ப்ளோவர்
 • Celery, Celery Leaves----Ajwain Ka Patta, Ajmoda----Ajmoda, Oma Valli----ஓம வல்லி
 • Chayote----Chow - Chow----bengaloor kathirikai----பெங்களூர் கத்திரிகாய்
 • Cherry----Cherry----cherry----செர்ரி
 • Chilli----Mirch, Mirchi----Milagai----மிளகாய்
 • Chin fruit, Litchie----Lichee, Litchi----Lichchi----லிச்சி
 • Cluster Beans----Gowaar Phali----kotthavarangkaai----கொத்தவரங்காய்
 • Cluster Beans --------Kothavarangai----கொத்தவரங்காய்
 • Coconut----Narial, Khopra----Thengaai----தேங்காய்
 • Coconut, desiccated----Sukha nariel ka choora----thuruviya thengaai, thengaai thuruval----துருவிய தேங்காய், தேங்காய் துருவல்
 • Coconut, dry----Copra----kopparai----கொப்பரை
 • Colocasia, Yam (or) Elephant yam, Esculent Root, Colocasia root----Jam Kandh, Arbi, Suran, Kachalu----Seppankizhangu----சேப்பங்கிழங்கு
 • Coriander leaves, Cilantro----Hara Dhaniya, Hara Dhania----Koththamallith thazhai----கொத்தமல்லித் தழை
 • Corn Cobs, Maize, Corn Kernel, Corn----Bhutta, Makka----Cholak Kadhir----சோளக்கதிர்
 • Cucumber----Kakdi, Kheera----Vellarikkai----வெள்ளரிக்காய்
 • Cudpahnut, Chironji nut (India), Cuddapa almond, Cuddapah almond----Chironji, Piyala, Charoli----Morala, Saara payir, saaraparuppu----மொரலா, சார பயிர், சாரபருப்பு
 • Custard Apple----Sharifa, Sherba, Ramphal ----Ramachita, sita pazham----ராமசீதா, சீதாபழம்
 • Dhania Patta ----Coriander Leaves ----Kothamallith thazhai----கொத்தமல்லித்தழை
 • Double Beans --------Double Beans----டபுள் பீன்ஸ்
 • Drum Stick --------Murungaikai----முருங்கைக்காய்
 • Drumstick Leaves, Mother's best friend, West Indian ben,----Muranka bhaji----Murungai Keerai----முருங்கைக் கீரை
 • Drumstick, Mother's best friend, West Indian ben----Muranka, Sahjan Ki Phati----Murungai Kai----முருங்கைக் காய்
 • Eggplant, Aubergine, Brinjal----Baingan----Kaththarikkai----கத்தரிக்காய்
 • Fenugreek leaves----Methi Ka Patta----Vendhyak keerai----வெந்தயக் கீரை
 • French Bean----Semfali , Flas Beans, Pharas Beans----naarilla avarai----நாரில்லா அவரை
 • French Beans --------Beans----பீன்ஸ்
 • Gardencress, garden pepper cress, pepper grass, pepperwort, Passerage, Town cress, Common cress----Halim, Candrasura, Chansur, Chandrashoor, Chaunsar, Halor, Hurf, Malavam, Tara, Tezac, Ahliva, Halang, Halon, Ashalika, Chandrashura, Raktabija, Raktaraji----Ativerai, Alivirai, Aliverai----ஆடிவேரை, ஆளிவிரை, ஆளிவேரை, ஆளி
 • Gherkins, Gentleman's Toes----Kunthroo, Goli, Tondli, Kundru, Tindla ----Kovakkai, Kovaikkai, Kovakai----கோவக்காய் , கோவைக்காய்
 • Grapes ----Angoor ----Diratchai----திராட்சை
 • Green beans (Fresh)----Papdi----Beans----பீன்ஸ்
 • Green Chilly , Green chilli----Hari Mirch ----Pachchai Milagai----பச்சை மிளகாய்
 • Jackfruit immature --------Palaapinju----பலாபிஞ்சு
 • Ladies Finger --------Vendaikai----வெண்டைக்காய்
 • Lotus Stem --------Thamari Thandu----தாமரை தண்டு
 • Mango----Aam----Mambhazam, Mambalam----மாம்பழம்
 • Mango Green --------Mangai----மாங்காய்
 • Mashmelon, Cantaloupe----Kharbooja----Parangikkai----பரங்கிக்காய்
 • Onion Stalks --------Vengaya Thandu----வெங்காய தண்டு
 • Papaya --------Pappalikai----பப்பாளிக்காய்
 • Peas --------Pachai Pattani----பச்சை பட்டாணி
 • Plaintain --------Vazhakai----வாழக்காய்
 • Plantain Flower --------Vazhakai Poo----வாழைப்பூ
 • Plantain Stem --------Vazhakai Tandu----வாழத் தண்டு
 • Pomelo, Grapefruit, Pomelo, Chinese grapefruit, Pummelo, Pommelo, Jabong, Shaddock----Chakothra, Cakotaraa, Sadaphal, Batawi nimbu----Pambalimasu, Palukkal----பம்பளிமாசு, பலுக்கல்
 • Pumpkin --------Parangikai----பரங்கிக்காய்
 • Ridge Gourd --------Pirkangai----பீர்க்கங்காய்
 • Sapota, sapodilla----Chikoo, Chiku, cheekoo, Chickoo----Sappotta Pazham----சப்போட்டாபழம்
 • Snake Gourd --------Pudalangai----புடலங்காய்
 • Sorrel Leaves, Sorrel Leaf, Indian sorrel----Khatti Bhaji, Gogu, Batva, Gohu, Gongoora, Pitva, Gonkura----Gonkura, Pulichha Keerai, Pulichhai, Pulimanji, Kasini----கோங்குரா, புளிச்சகீரை , புளிச்சை, புளிமஞ்சி, காசினி
 • Spinach----Palak----Pasalai kkeerai----பசலை க்கீரை
 • Spinach Stalks --------Pasalai Thandu----பசலை தண்டு
 • Sundakai --------Sundakai----சுண்டைக்காய்
 • Sword Beans --------Kattu Thambattam----கட்டு தம்பட்டம்
 • Tapioca, Yucca----Simla Aloo----Maravallikkilangu----மரவள்ளிக்கிழங்கு
 • Tomato --------Thakkali----தக்காளி
 • Water Chestnuts, Palmyra, Palm, Borassus ----Shingara, singhada ----Panai Kizhangu, Panamkizhangu, Nungu, NONGU----நொங்கு, நுங்கு

chemicals - used in cooking

 • BORAX ---Suhaga ---Vengaram ---வெங்காரம்
 • BORNEOL ---Baras ---Pacha Karpuram ---பச்ச கற்பூரம்
 • CAMPHOR ---Kapoor ---Karpooram ---கற்பூரம்
 • COPPER SULPHATE ---Morathutha ---Mayil Thuththam ---மயில் துத்தம்
 • HYDROSULPHATE OF SODA ---Hydros ---Hydros ---ஹைட்ரோஸ்
 • MENTHOL ---Pothina Aroc ---Omapu ---ஓமப்பூ
 • SODIUM BICARBONATE ---Fool Soda ---Appa Soda ---ஆப்ப சோடா
 • THYMOL ---Ajmaful ---Vamam ---வாமம்

Groceries

English---Transliterated Hindi---Transliterated Tamil---தமிழ்
 • Barley---Jao, Jowar---Barley---பார்லி
 • Bengal Gram, Gram Dal, Split Bengal Gram ---Chana Dal, Chana ---Kadalai Paruppu---கடலைபருப்பு
 • Black Eyed Beans ---Chawli, Lobhia, Chowli---Karaamani---காராமணி
 • Black gram (Whole)---Sabut Urad---Muzhu Kadalai Paruppu---முழு கடலை பருப்பு
 • Black gram (whole), Black Gram Dal, ---Sabut Urad, Udid Dal, Sabut Urad Dal, Kaali Dal---Ulutham Paruppu---உளுத்தம் பருப்பு
 • Broken black gram, Split Black Gram ---Urad Dhal, Urad Dal, Kaali Dal---Udaiththa Ulutham Paruppu---உடைத்த உளுத்தம் பருப்பு
 • Broken Wheat ---Dalia, Gehu---Samba Gothumai, Gothumai Ravai---சம்பா கோதுமை , கோதுமை ரவை
 • Bun ---Paav, Pav, Pao ---Rotti, Bun---ரொட்டி, பன்
 • Chickpeas (brown) ---Chana, Kabuli Chana---Karuppu Kondai Kadalai---கருப்பு கொண்டைகடலை
 • Chickpeas (green) ---Cholia, Hara Chana---Pachchai Kondai Kadalai---பச்சை கொண்டைகடலை
 • Chickpeas (white) ---Kabuli Chana---Vellai Kondai Kadalai---வெள்ளை கொண்டைகடலை
 • Coriander seeds---Dhania---Kothamalli Vidhai---கொத்தமல்லி விதை
 • Cow gram, Cow pea---Lobiya, showli---Kaaramani---காராமணி
 • Cumin Seed ---Jeera ---Jeeragam---ஜீரகம்
 • Dillweed, Dill---Suvabhaji, Sui Bhaji, Sowa, Sova, Soowa---Shatapushpam, Sathakuppai Sompa---ஷடபுஷ்பம், சதகுப்பை சோம்பா
 • Dry Fenugreek, Dry fenugreek leaves---Kasuri Methi, Kastoori Methi, Kasturi Methi, Kasoori Methi---Kaindha Vendhaya Ilai---காய்ந்த வெந்தய இலை
 • Dry red beans, Kidney beans, Red Kidney Beans---Rajma---Rajma / Karamani or Karamani Payir---ராஜ்மா / காராமணி / காராமணி பயிர், சிகப்புக் காராமணி
 • Dry white peas---Safed Mattar---Vellai Pattani---வெள்ளை பட்டாணி
 • Fenugreek Seeds ---Methi---Vendhayam---வெந்தயம்
 • Fieldbean, Field Bean, Lima beans---Vaal, ballāra, Val---Mochchai, Mochai kottai ---மொச்சை, மொச்சை கொட்டை
 • Finger millet, Ragi, Elucine coracana---Ragi, Nachni---Kezhvaragu---கேழ்வரகு / கேழ்வரகுராகி
 • Gram dal, Large white gram---Chana Dal---ulutham paruppu---உளுத்தம்பருப்பு
 • Green Gram ---Moong, Moong Dal, Mung Dhal---Payattham Paruppu, Payatram Paruppu---பயத்தம் பருப்பு, பயற்றம் பருப்பு
 • Green Gram (split), Peeled broken green gram---Moong Dal, Urad Dhuli Dal---Udaiththa Payattham Paruppu---உடைத்த பயத்தம் பருப்பு
 • Green Gram (whole)---Sabut Moong, Sabut Mung---Muzhu Payattham Paruppu, Pasippayaru---முழு பயத்தம் பருப்பு, பாசிப்பயறு
 • Green peas, Peas---Mattar, Matar---Pattani---பட்டாணி
 • Groundnut (or) Pea nuts---Moongphali, Moongfali, Moong Fali, Mumfali---Nila Kadalai---நிலகடலை
 • Horse Gram ---Kulthi, Kuthlee---Kollu---கொள்ளு
 • Horsebean, Horse Bean ---Urad, Urad Dal---ulutham paruppu---உளுத்தம்பருப்பு
 • Hummus / Bengal gram leaves---Chaney Ki Bhaji---Kadalai Thazhai---கடலை தழை
 • Italian millet, Foxtail millet---Kangani---Thinai, Tinai, camai, kavalai, kambankorai---திணை, கமை, கவளை, கம்பன்கோரை
 • Lentil, Red Lentil, Red Lentil (Split), Yellow Lentil---Masoor Dhal, Masur Dal---Mysoor paruppu---மைசூர் பருப்பு
 • Long grain rice---Basmati Chawal, Basmati---Basmati---பாஸ்மதி
 • Maize, Sorghum, Shorghum, Shorgum, Sorgum---Bhutta, Makka, Jowar---Cholam---சோளம்
 • Mustard, Mustard seeds---Rai, Sarso---Kadugu---கடுகு
 • Oats - Instant oatmeal, Oat bran, Oat flour, Oat groats, Old-fashioned oats, Quick-cooking oats, Steel-cut oats---Jaee---Oats, kAADaikkaNNi, Ottarisi---ஓட்ஸ், காடைக்கண்ணி, ஓட்டரிசி
 • Pearl Millet---Bajri , Bajra---Kambu, Cumbu---கம்பு
 • Peppercorns, Black Pepper ---Kali Mirchi---Milagu---மிளகு
 • Pigeon pea, Red gram, Pulse---Tur Dal, Arhar Dal, Toordal, Tuar Dhal---Thuvaram Paruppu---துவரம் பருப்பு
 • Puffed Rice, Flaked Rice, Beaten Rice , Rice flakes---Kurmura, Poha, Chiwda, Mumurae, Chivda---Aval, Pori---அவல், பொரி
 • Raw Rice---Chawval---pachcharisi---பச்சரிசி
 • Red chillies---Lal Mirchi---vara milagai---வர மிளகாய்
 • Rice---Chawal---arisi---அரிசி
 • Roasted gram---Puttani Dhal---Pottuk kadalai---பொட்டுக் கடலை
 • Rock salt---Seendha Namak---Kal Uppu---கல் உப்பு
 • Sago, Sagu---Saboodana, Sabudana ---Javvarisi---ஜவ்வரிசி
 • Salt---Namak---Uppu---உப்பு
 • Sarson ---Mustard Seeds (Moti) ---Kadugu Periyadhu---கடுகு பெரியது
 • Sesame---Til---Yellu---எள்ளு
 • Soya Beans---Bhat---soya---சோயா
 • Sugar---Cheeni, Shakkar---sarkarai, seeni---சர்க்கரை, சீனி
 • Sugar candy, Rock Sugar ---Misri---Kalkandu---கல்கண்டு
 • Tamarind ---Imli ---Puli---புளி
 • Turmeric powder---Haldi---Manjal Podi---மஞ்சள் பொடி
 • Vermicelli, Semolina---Sevai, Seviyan, Semia---Semia---சேமியா
 • Walnut---Akhrot ---Akroot, walnut---அக்ரூட், வால்நட்
 • Wheat ---Gehun,Gehu---Kodhumai---கோதுமை
 • White goose-foot---Bathua, Bathoa, Jaun Saag---Parupa kire---பருப்பு கீரை
 • White kidney beans---Chowly---vellai rajma---வெள்ளை ராஜ்மா
/

இட்லி டிப்ஸ்

 1. மல்லிப்பூ போன்ற இட்லி வேண்டுமானால், உளு‌ந்தை அ‌திகமாக‌த்தா‌ன் போட வே‌ண்டு‌ம் எ‌ன்ற அவ‌சிய‌மி‌ல்லை.
 2. இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.
 3. இட்லி செய்யும்போது வாசனை தூக்கலாக காணப்பட வேண்டுமானால், இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.
 4. சுடுதண்ணீரில் ஊறவைத்தால் இட்லி மிருதுவாகப் பஞ்சு போல இருக்கும்.
 5. கல்லில் கல்லால் அரைபடுவதால் மிக்ஸியில் அரைக்கப்படும் மாவை விட கிரைண்டரில் அரைக்கப்படும் மாவே சிறந்த ருசியைத் தரும்.
 6. உளுந்தை அரைக்கும் போதே அவ்வப்போது சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு வர வேண்டும். கெட்டியாக அரைத்து முடித்துவிட்டு, கடைசியில் நமக்குத் தேவைப்படும் பதத்திற்கு நீர் சேர்த்தால் சுவை நன்றாக இருக்காது.
 7. தூள் உப்பைவிட கல் உப்பு ருசியை மேம்படுத்தும்.
 8. மாவைக் கரண்டி உபயோகிக்காமல் கையினால் கலந்து எடுத்துவைத்தால் நன்றாகப் பொங்கியிருக்கும்.
 9. இட்லிமாவில் நல்லெண்ணை கலந்து செய்தால் சுவையாக இருக்கும். பயணங்களுக்கு எடுத்துப் போகும்போது இட்லிமாவில் நல்லெண்ணை சேர்த்து செய்தால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
 10. அந்தக் கால இட்லித் தட்டுகள் போல் அடியில் துணிவிரித்து அதன்மேல் மாவை ஊற்றிச் செய்யும் இட்லிகள் தனி ருசி. வெந்ததும் துணியைக் கவிழ்த்துப் போட்டு சிறிது நீர் தடவி சூட்டைக் குறைத்து, பின் எடுத்தால் துணியில் ஒட்டாமல் வரும்.
 11. சிலர் இப்பொழுது அரிசியை அரைப்பதற்குப் பதில் இட்லிரவையாக வாங்கி உளுந்து மட்டும் அரைத்து, இரண்டையும் கலந்து செய்கிறார்கள். இட்லிரவை கிடைக்காதவர்களும், கிரைண்டர் இல்லாதவர்களும் தாங்களே கூட இதைத் தயாரித்துக் கொள்ளலாம். புழுங்கல் அரிசியை மிக மெல்லிய ரவையாக உடைத்துக் கொண்டு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, எஞ்சியிருக்கும் தண்ணீரை வடித்து, அரைத்துவைத்திருக்கும் உளுந்தோடு கலந்துகொள்ளவேண்டும். ஆனால் இந்தமுறைக்கு உளுந்து அதிகமாக, 3:1 என்ற விகிதத்தில் சேர்க்கவேண்டும்.
 12. இட்லித் தட்டுகளில் ஊற்றுவதற்கு முன் மாவைக் கிளறாமல் மேல் மாவாக எடுத்து விட்டால், இட்லி மென்மையாக வரும் என்று படித்திருக்கிறேன். சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். உண்மையில் மாவைக் கலக்காமல் இருக்கும்போது நன்கு அரைக்கப்பட்ட எடை குறைவான உளுத்தம் மாவு மேல் பகுதியிலும், கனமான அரிசிமாவு பாத்திரத்தின் அடியிலும் தங்கி இருக்கும். எனக்குத் தெரிந்தவரை இந்த மேல்மாவில் செய்யும் இட்லி வெறும் உளுந்து மட்டும் கொண்டதாக தட்டையாக நிச்சயம் சரியாக வராது. மாவை சரியான அளவில் சரியான பதத்தில் அரைத்து, ஊற்றும் போதும் நன்றாகக் கலக்கி, பின் தட்டுகளில் ஊற்றுவதே சரியான முறை. இப்படிச் செய்வதால் எல்லா இட்லிகளும் ஒரே பதத்தில் இருக்கும்.
 13. இட்லி குறித்த இன்னொரு முக்கியமான விஷயம். இட்லி மீந்தால் என்ன செய்வது என்று குறிப்புகள் கொடுத்து வந்தது போக, குறிப்புகளுக்காக இட்லியை மிகுதியாகச் செய்யும் அளவு ருசியான முறைகள் இருக்கின்றன. அவை பின்னால் வரும்.

Herbs used in cooking - Part 1

 • Aconite ---Vachnag ---Nabhi ---நாபி
 • Aloe Vera, Aloe---Kuar Gandhal---Sotthukkathazhai, kumari---சோத்துக் கத்தாழை, குமாரி
 • Alum---Phitkari---Padikaram---படிகாரம், சீனாக்காரம், படிக்காரம்
 • Andropagon ---Khus ---Vettiver, Vilamichhamver---விலாமிச்சம் வேர், வெட்டிவேர்
 • Andrpagun muricatus ---Sugandh ---Karatnval ---கரத்னவல்
 • Apricot---Khumani, Khoobani, Jardalu, qubani, Jaldaru ---Apricot, Badham Pazam ---ஆப்ரீகாட், பாதாம் பழம்
 • Arrowroot, Arrow Root ---Paniphal, Tikora, Thavakir ---Arrowroot, Aroti mavu ---ஆரோரூட்
 • Asparagus---Shatwar, Sootmooli, Halyan, Musli---Kilavari---கிலவரீ
 • Asparagus recemosus ---Shathavari ---Shathavari ---சதாவரி
 • Babreng ---Valvading ---Valvilangam babu ---வால்விளங்கம் பாபு
 • Basil, Basil leaves---Tulsi, Barbar, Tusli Ke Patte---Tirunirrippachai, Tiviragandam or Tulasi---திருநீரிப்பச்சை, திவிரகந்தம், துளசி, துளசி இலை
 • Berberiasaristata ---Daroohaldi ---Mara Manjal ---மர மஞ்சள்
 • Bijour gollstone ---Gorochan ---Gorochanam ---கோரோசனம்
 • Black Hellebore ---Kutki ---Kaduku rohini ---கடுகு ரோகினி
 • Bushy gardevia ---Mainpal ---Madukkarai ---மதுக்கரை
 • Catechu, cachou, cutch, cashoo, Japan earth, White cutch, gambier, gambeer, gambir---Malay, Katha, Kaththa---Kaada kācu, kācukkaṭṭi, Katthakambu---காடாகாச்சு, காச்சுகட்டி, கத்தகாம்பு
 • Cedrus Deodara(Pine Sadipodar) ---Devadar ---Devadar Kattal ---தேவதாரு கட்டல்
 • Chireta ---Chiraytha ---Nilavembu ---நிலவேம்பு
 • Cinnamonum tamala ---Tejpata ---Brinchi Ilai, Punnai Ilai, Ilavanga Patri---பிரிஞ்சி இலை, புன்னை இலை, இலவங்க பத்திரி
 • Clero-deudronserratum ---Bharegi ---Bukkarathi keeral ---புக்கரதி கீறல்
 • Common cress ---Halo ---Thukkamalanki ---துக்கமளங்கி
 • Costusroot ---Koshta ---Goshtam ---கோஷ்டம்
 • Cotton seeds, Cottonseed---Dhanti, Kapas---Paruththi vidhai, ilavu, ilavam---பருத்தி விதை, இலவு, இலவம்
 • Creya arboria ---Kaffal, kumbhi, katabhi---Paparavudam ---பாபரவுடம்
 • Cubebs ---Chanak bala ---Valmilagu ---வால்மிளகு
 • Cucumber seeds ---Keerabeej ---Durboos vldhal ---தர்பூஸ் விதை
 • Curry Leaves ---Kari Patta, Curry patta, Meetha Neem Ka Patte, Kadi Patta---KaruVEppilai---கருவேப்பிலை
 • Dry Gooseberry ---Awala ---Nellikkai ---நெல்லிக்காய்
 • Eaglewood ---Agar ---Ahilikattai ---அஹிலிகட்டை
 • Eloopa tree ---Mahuaa ---Kattu iluppi ---காட்டு இலுப்பி
 • Esculentflacourtia ---Bavachi ---Thippa thogai ---திப்ப தோகை
 • SPIKENARD ---Jataniasi ---Jatamasi ---ஜடமசி
 • STAFF TREE ---Malkanguni ---Bache ---பச்சே
 • SURINAM MEDLAR ---Moulsiri ---Mothgam ---மோதகம்
 • SWEET FLOGROOT ---Godavach ---Vasambu ---வசம்பு
 • TAALLREDMINT ---Pudina ---Pudina ---புதினா
 • TAXUS BACATA ---Thaliroopam ---Panial ---பணியல்
 • YELLOW RESIN ---Raal ---Arakku ---அரக்கு
 • YELLOW WAX ---Maim ---Minam ---மீனம்